
பல நாடுகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் கஞ்சா. இந்நிலையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் கஞ்சா இலை புற்றுநோய் செல்கள்களை அழிப்பது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் நிறுவனம் தனது இணையதளத்தில் மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளது.
மேலும் அந்த இணையதளத்தில், கஞ்சாவை வைத்து ஆய்வகங்களில் பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டதாகவும், அதில் புற்றுநோய் அறிகுறிகள், புற்றுநோய் சிகிச்சையால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு சிகிச்சையளிப்பதிலும் மற்றும் புற்றுநோய் செல்கள்களை அழிப்பதும் தெரியவந்துள்ளது.
ஆனால் கஞ்சா இலை புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவது என்பது மிகச்சிறிய அளவில் மட்டுமே நடைபெறுகிறது. இது தொடர்பாக மேலும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியது முக்கியம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
maalaimalar.com
0 Comments