Ticker

6/recent/ticker-posts

தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் அலுவலகம் மீது கைகுண்டு வீச்சு

தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா மற்றும் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான ந.சிறிகாந்தா ஆகியோரின் அலுவலகம் மீது சிறிய ரக கைகுண்டு வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ். மார்ட்டீன் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகம் மீதும் பருத்தித்துறை வீதியில் உள்ள சிறிகாந்தாவினுடைய அலுவலகம் மீதும் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சனிக்கிழமை (15) இரவு 11.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Post a Comment

0 Comments