Ticker

6/recent/ticker-posts

இசையமைப்பாளர் இளையராஜா மருத்துவமனையில் அனுமதி

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு (72) வெள்ளிக் கிழமை  இரவு மார்பில் வலி ஏற்பட்டது.

இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை அப்பலோ மருத்துவமனையில் சேர்த்தனர்.


மருத்துவர்கள் கூறுகையில், இருதய தீவிர சிகிச்சைப் பிரிவில் அவரை அனுமதித்து, மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, தற்போது அவர் நலமாக உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், இளையராஜாவுக்கு இருதய சிகிச்சை தேவையா என்பது குறித்து ஓரிரு நாள்களில் முடிவு செய்யப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments