லங்கா ஈ நியூஸ் ஊடகத்தின் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகெடவின் கொலையுடன் தொடர்புடையவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றில் உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறு உத்தரவினைப் பெற்றுக்கொள்ள உள்ளனர்.
எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் நான்கு இராணுவ உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
லெப்டினன் கேணல் குமார ரட்நாயக்க, லெப்டினன் கேணல் சிறிவர்தன, சார்ஜன்ட் ராஜபக்ச மற்றும் கோப்ரல் ஜயலத் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
லெப்டினன் கேணல் குமார ரட்நாயக்க, லெப்டினன் கேணல் சிறிவர்தன, சார்ஜன்ட் ராஜபக்ச மற்றும் கோப்ரல் ஜயலத் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த காணாமல் போதல் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே இரண்டு தமிழர்கள் உள்ளிட்ட மூன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு தமிழர்களும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பின்னர் இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்காக கடமையாற்றியுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
tamil.srilankamirror.com
0 Comments