ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை காணாமல் போகச் செய்தது தொடர்பாக இடம்பெற்று வரும் விசாரணைகளிலிருந்து பல இரகசியங்கள் அம்பலத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. எக்னலிகொட காணாமல் போக செய்யப்பட்ட விவகாரத்தில் விடுதலைப்புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த தவேந்திரன் என அழைக்கப்படும் சுமதிபால சுரேஷ;குமாரின் பங்கு முக்கியமானது என கருதப்படுகிறது. இவர் இராணுவ புலனாய்வு பிரிவினருடன் சேர்ந்து ஆட்களை கடத்தும் வேலைத்திட்டத்தில் பங்கேற்றிருப்பதாக அறிய வருகிறது.
குற்றப்புலனாய்வு பிரிவு நடாத்தி வரும் விசாரணைகளில் இன்னும் பல இரகசியங்கள் வெளிச்சத்திற்கு வரவுள்ளன. மஹிந்த ஆட்சிக்கு எதிரானவர்களை கடத்தி கொலை செய்வதற்கு போலியான ஒரு புலிகள் அமைப்பை இராணுவ புலனாய்வு பிரிவு வைத்திருந்ததாக விசாரணைகளிலிருந்து அறிய வருவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

0 Comments