நடந்து முடிந்த 2015 பாராளுமன்ற தேர்தலிலே போதிய வாக்குகள் இருந்தும் நாம் பாராளுமன்ற பிரதிநிதியை இம்முறையும் நாம் இழந்துவிட்டோம் . 26 வருடங்களாக பிரதிநிதி இல்லை இல்லை என்று கூறி கூறி இம்முறையும் தோல்வியுற்றோம் . இதற்கான உண்மையான நிதர்சனமான காரணங்கள் என்ன என ஆராய்வோம் .
காரணம் 1 .
MP இல்லை இல்லை என்று கூறினோமே தவிர அதற்கான திட்டங்களை தனிப்பட்ட ரீதியாக ஒவ்வொருவரும் முயற்சி செய்யவில்லை . அதாவது வாக்களிப்பு வீதம் 55 % மட்டுமே . ஒவ்வொருவரும் முயற்சி செய்திருந்தால் இதனை 65 % அதிகரித்து இருந்தால் இரண்டு MP களை பெற்றிருக்க முடியும் . முஸ்லிம்கள் வாழும் சில மாகாணங்களிலே வாக்கு வீதம் 75 % ஆகும் .
காரணம் 2.
எமது தொகுதியிலே நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 6290. ஒழுங்காக வக்களிக்கு முறைய மக்களுக்கு அறிவூட்டிருந்தால் . நாம் இரண்டு MP களை பெற்றிருக்க முடியும் .
இரண்டு MP களை நாம் பெறுவதற்கு தேவையான வாக்குகள் 2540 ஆகும்.
அதாவது நவவி ஹாஜியார் வெற்றி பெறுவதற்கு தேவையான வாக்குகள் 1300, சகோதரர் நஸ்மி அவர்கள் வெற்றி பெறுவதற்கு தேவையான வாக்குகள் 2400.
காரணம் 3.
தனிப்பட்ட பிரச்சினைகள் , கட்சி பிரச்சினைகள் காரணமாக நவவி ஹாஜியாருக்கு வாக்களித்தவர்கள் நஸ்மி அவர்களுக்கு வாக்களிக்காமலும் நஸ்மி அவர்களுக்கு வாக்களித்தவர்கள் நவஹி ஹாஜியாருக்கு வாக்களிக்காமலும் , பைரூஸ் ஹாஜியாருக்கு வாக்களித்தவர்கள் நவவி மற்றும் நஸ்மி அவர்களுக்கு வக்களிக்காமலும் இருந்த மனாப்பைகள் சுமார் 8000.
காரணம் 4.
எமது ஊரின் சில அரசியல் வாதிகள் பெரும்பான்மை இனத்தவர்களுடன் இணைந்து அரசியல் செய்யாமல் எமது ஊருக்கான வெல்லக்கூடிய ஒருவருடன் இணைந்திருந்தால், அவரின் வெற்றிக்கு வாக்குகளை பெற்றுக் கொடுத்திருந்தால் , இந்த தேவையான 2500 வாக்குகள் கிடைத்திருக்கும் நாம் இரண்டு MP களை பெற்றிருக்க முடியும் .
காரணம் 5
மேலும் ஐ .தே .க . வேட்பாளர்கள் எனக்கு மட்டும் போடுங்கள் அவர்களுக்கு போடதீர்கள் . என்று கூட சிலர் இரகசியமாக கூறியதும் ஒரு காரணமாகும் .
காரணம் 6
நவவி ஹாஜியாரின் ஆதரவாளர்கள் உண்மையிலேயே மனம் வைத்து வாக்குகளை பெற்றுக்கொடுக்க முன்வராமல் மறைமுகமாக வேளை செய்தார்கள். இவர்கள் முழு மூச்சாக ஈடுபட்டிருந்தால் அவரை வெற்றி பெற வைத்திருக்கலாம் .
காரணம் 7
முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் , நாம் ஏன் ACMC காரருக்கு வாக்குகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் . ஆகவே நாம் எமது கட்சிக்காரருக்கு மட்டுமே வாக்களிப்போம் என்ற சுயநாலனும் ஒரு காரணமாகும்.
பிற்குறிப்பு :
PPAF இணைப்பற்றி கூறவேண்டுமானால் அதுவும் ஒரு அரசியல் கட்சி (சுயேச்சை) அவர்களுக்கும் வாக்கு கேட்பதற்கு உரிமை உண்டு . அவர்களின் முயற்சிக்கு அவர்களுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன .
அவர்களால் தான் எமது ஊருக்கு MP கிடைக்கவில்லை என்று கூடவிடமுடியது .
ஆகவே இனியும் நாம் இவ்வாறு செய்யாமல் எமது சிறுவர்களின் , சந்ததியினரின் எதிகாலத்தை கருத்திட் கொண்டு கட்சி , நிறம் , ஊர் வதம் பிரதேச வாதம், தனிப்பட்ட பிரச்சினைகள் இவற்றை ஒருபுறம் வைத்துவிட்டு நாம் ஒற்றுமையாய் வாக்களிப்போம் .
இல்ஹாம் மரைக்கார் .
0 Comments