Ticker

6/recent/ticker-posts

பசுக்களை பாதுகாக்க கர்நாடாகவிற்கு ராணுவத்தை அனுப்புங்கள் மோடிக்கு பஜ்ரங் தளம் அமைப்பாளர் கடிதம்!

(இந்தியா)

பசுக்களை பாதுகாக்க கர்நாடாகவிற்கு ராணுவத்தை அனுப்புங்கள் என்று பிரதமர் மோடிக்கு கர்நாடக பஜ்ரங்க தளம் அமைப்பாளர் ஷரண்  பம்ப்வெல் கடிதம் எழுதி உள்ளார்.

பஜ்ரங் தளம் அமைப்பாளர் ஷரண்  பம்ப்வெல், பிரதமர் மோடிக்கு ஒரு கடிதத்தில் கூறியதாவது:

கர்நாடகாவில் ஆயிரக்கணக்கான பசுக்கள் கொல்லப்படுகின்றன. நூற்றுக்கணக்கான பசுக்கள் கடத்தப்படுகின்றன. இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவர்களை தடுக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் சட்டப்படி உரிமை உள்ளது. 

கர்நாடகா காவல்துறையில் ஆள் பற்றாக்குறை இருப்பதால் பசுக்களை பாதுகாக்க  கர்நாடகாவுக்கு மத்திய அரசு ராணுவத்தை அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை அவர் வெளியிட்டதால் கர்நாடகாவில் மீண்டும்  சர்ச்சை கிளம்பி உள்ளது.


Post a Comment

0 Comments