Ticker

6/recent/ticker-posts

தெற்கு கலிபோர்னியாவில் பெரு வெள்ளம்

100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

அங்கு கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக கோயோட் கிரீக் ((coyote creek)) என்ற ஆற்றின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து சான் ஜோஸ் நகருக்குள் தண்ணீர் புகுந்தது. 

இதனால் குடியிருப்புகள் மற்றும் கார்கள் உள்ளிட்ட பொருட்கள் நீரில் மிதக்கின்றன. இதுவரை 14ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

100 ஆண்டுகளில் இல்லாத வெள்ளப்பெருக்கு தற்போது ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள வானிலை மைய அதிகாரிகள், அடுத்து வடக்கு கலிஃபோர்னியாவில் கனமழை பெய்யக் கூடும் என்று கூறியுள்ளனர். polimernews.com

Post a Comment

0 Comments