சசிகலாவின் சிறை தண்டனைக்குப் பின் பெரிய சதி உள்ளதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பு என்பதால் அமைதியாக இருக்கிறோம் என்றும் தீபக் கூறியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவராசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சசிகலாவின் அக்காள் மகனான டிடிவி.தினகரனும் ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக்கும் நேற்று சசிகலாவை பெங்களூரு சிறையில் சந்தித்தனர். பின்னர் அவர்கள் சென்னை புறப்பட்டனர். அப்போது காரில் இருந்தபடியே ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, சசிகலா அத்தை சிறையில் இருப்பதற்கு பின்னணியில் பெரிய சதி உள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளதால் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறோம் என்றார். மேலும் அவரது சகோதரியான தீபா குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என தீபக் கூறினார். tamil.oneindia.com

0 Comments