Ticker

6/recent/ticker-posts

இலங்கையர் கடத்திய தங்கம் திருச்சியில் சிக்கியது.

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு கடத்தப்பட்ட 35 இலட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில், சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

இலங்கையில் இருந்து சென்ற 2 பயணிகள் தங்கள் உடமைக்குள் மறைத்து வைத்து கொண்டு சென்ற தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று மலேசியாவில் இருந்து வந்த பெண் பயணியிடம் இருந்து 175 கிராம் தங்க நகைகளை இந்திய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். பயணிகள் மூவரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments