Ticker

6/recent/ticker-posts

சி.ஐ.ஏ பற்றிய ரகசிய ஆவணங்கள் பலவற்றை வெளியிட்டது விக்கிலீக்ஸ் #Vault7

"Vault 7" எனும் பெயரில். அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ பற்றிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது . CIA பற்றிய ரகசிய ஆவணங்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் கசிவது இதுதான்  முதல்முறை என்கிறது விக்கிலீக்ஸ். 

இதில் சி.ஐ.ஏவின் ரகசிய ஹெக்கிங் திட்டத்தைப் பற்றிய 8,761 ஆவணங்கள் வெளியாகியுள்ளன.



இந்த ஆவணங்களில் அப்பிள் ஐபோன், கூகுளின் ஆண்ட்ராய்ட், சம்சுங் டிவிக்கள், விண்டோஸ் போன் போன்றவற்றை ஹெக்கிங் செய்து ரகசிய மைக்ரோபோனாக பயன்படுத்தும் அளவுக்கு சி.ஐ.ஏ திட்டமிட்டிருந்தது என்றும் விளக்கப்பட்டுள்ளது. 
இதுபற்றி ஃபேஸ்புக்கில்  நேரடி ஊடக சந்திப்பு ஒன்றை  வைக்க ஜூலியன் அசாஞ்சே முயற்சித்தபோது, அதற்கு  சைபர் தாக்குதல்நடாத்தப்பட்டதாக அறிய வருகிறது.

Post a Comment

0 Comments