Ticker

6/recent/ticker-posts

சசிகலாவின் கணவர் நடராஜன் காலமானார்

மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா கணவர் ம. நடராஜன் (வயது 75) சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். 

தஞ்சாவூர் மாவட்டம் விளாரில் 1942-ம் ஆண்டு பிறந்தவர் நடராஜன். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் அரசியலுக்கு வந்தவர் நடராஜன். பின்னர் அரசு மக்கள் செய்தித் தொடர்புத் துறை அதிகாரியாக பணியாற்றினார். 

1975-ம் ஆண்டு சசிகலாவை திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி நடத்தி வைத்தார்.

பின் 1980களில் ஜெயலலிதாவுடன் நட்பு ஏற்பட்ட நிலையில் அவருக்கு பின்புலமாக, ஒருகட்டத்தில் ஆலோசகராகவும் இருந்து வந்தார் நடராஜன்.

அண்மையில் அவருக்கு உடநலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை குளோபல் மருத்துவமனையில் கடந்த 16-ந் தேதியன்று தீவிர சிகிச்சைக்காக நடராஜன் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1.35 மணியளவில் நடராஜன் உயிர் பிரிந்தது.

Post a Comment

0 Comments