Ticker

6/recent/ticker-posts

200க்கும் அதிகமான இலங்கையர்கள் மத்திய கிழக்கில் மரணித்துள்ளனா்

இந்த வருடத்தில் மட்டும் வெளிநாட்டில் வேலைக்காக சென்ற 200க்கும் அதிகமான இலங்கையர்கள்  மரணித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இப்படி மரணித்தவர்களில்  50 பேர் பெண்களாவர். இறந்தவர்களுள் 145 பேர் இயற்கை காரணங்களுக்காக மரணித்துள்ளனா். ஆறு பெண்கள் உட்பட  25 ஆண்களும்  தற்கொலை செய்து கொண்டதன் மூலம் மரணித்துள்ளனா்.

வீதி விபத்துகளின் காரணமாக 21 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த ஆண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மரணித்தவா்களின் சடலங்களை  இலங்கைக்கு கொண்டு வருவதற்கு  சுமார் 07 மில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளது

மரணமடைந்த தொழிலாளர்கள்  சவுதி, குவைத் மற்றும் கத்தார் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் வேலைக்கு சென்றவர்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 

Post a Comment

0 Comments