பிரதம மந்திரி பதவியில் இருந்து விலகுவதற்கு தான் தயாரென்றும் ஆனால் அவரை நியமித்த ஜனாதிபதியே அதற்கான முடிவை எடுக்க வேண்டும் என்று மஹிந்த ராஜபக்ஷ தொிவித்துள்ளார்
ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக் சந்தித்தபோது இவ்வாறு கூறியதாக அறியவருகிறது.
“உங்களுக்கு பிரதமர் பதவி கிடைப்பதில் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை”என்று ரணிலிடம் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த சட்டவிரோத செயற்பாட்டினால் நாடு ஸ்திரமற்ற நிலைக்கு தள்ளபட்டதைத் தவிர வேறு ஒன்றும் நடக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய ரணில் விக்ரமசிங்க மேலும் சட்டரீதியற்ற முறையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முயல்வது பிரச்சினையை மேலும் சிக்கலடைய வைக்கும் என்று எச்சரித்ததாகவும் அறியவருகிறது.

0 Comments