Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணைக்கு த.தே.கூ. ஆதரவில்லை!

ஜனாதிபதி சிறிசேனவுக்கு எதிராக கொண்டுவரப்படும் எந்த  குற்ற பிரேரணைக்கும் தாம் ஆதரவளிக்க போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளது.
நாட்டில்  ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைக்கு ஒரே தீர்வு ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் குற்றப் பிரேரணை கொண்டு வருவது மட்டுமே என ஐக்கிய தேசியக் கட்சி கூறிவருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்படும் குற்ற பிரேரணைக்கு ஆதரவளிக்க போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments