பிரமுகர் கொலை சதி முயற்சி தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய பிரஜையான மர்சிலி தோமஸ் மற்றும் நாலக்க டி சில்வா ஆகியோர் இன்று கொழும்பு கோட்டை பதில் நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, இருவரையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சுகயீனமடைந்துள்ள நாலக்க டி சில்வாவிற்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகளை சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் வழங்க முடியும் என சிறசை்சாலைகள் அத்தியட்சகருக்கு நீதவான் இன்று அறிவித்துள்ளார்.
எனினும், மருத்துவர்களின் ஆலோசனையின்படி சந்தேகநபருக்கு மேலதிக சிகிச்சைகள் தேவைப்படும் பட்சத்தில் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

0 Comments