ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச நேற்று பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
அதற்கு பதிலாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் செயலாளராக தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான கட்சியின் மத்திய குழு கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவைத் தொடர்ந்து ஸ்ரீ.ல.சு.க. அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள் மற்றும் கட்சி மூத்த அங்கத்தவர்களுக்கிடையில் ஏற்பட் கருத்து முரண்பாட்டால் சர்ச்சைகள் ஏற்பட்டதாக அறிய வருகிறது.
இதேவேளை துமிந்த திசாநாயக்கவை மீண்டும் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கட்சி அங்கத்தவர்கள் மத்தியில் எழுந்து வருவதாக அறிய வருகிறது.
0 Comments