வௌிநாட்டு சிகரட்டுக்களை நாட்டுக்குள் கடத்தி வந்த இலங்கை பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கஅதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேகநபர் இன்று அதிகாலை 12.55 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
சந்தேகநபரின் பயணப் பொதிகள் சுங்க அதிகாரிகளினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது வெளிநாட்டு சிகரட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
0 Comments