தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
பிரமுகர் கொலை சதித்திட்டம் தொடர்பில் நடைபெறும் விசாரணைகளுக்காவே அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
இன்று காலை 9.30 மணியளவில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு, மொஹமட் முஸம்மிலுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவும் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.
பிரமுகர் கொலை சதித்திட்டம் தொடர்பில் நடைபெறும் விசாரணைகளை முன்னிட்டு, சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.newsfirst.lk

0 Comments