( ஐ. ஏ. காதிர் கான் )
இதுவரை காலமும் இலக்கம் 41, ரேணுகா கட்டிடம், ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு - 01 என்ற முகவரியில் இயங்கிவந்த ஜனாதிபதி நிதியம், புதிய முகவரியில் இயங்கி வருவதாக, ஜனாதிபதி நிதியம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
இதற்கமைய, (18) வெள்ளிக்கிழமை முதல் இலக்கம் 35, மூன்றாம் மாடி, லேக்ஹவுஸ் கட்டிடம், டி.ஆர்.விஜயவர்தன மாவத்தை, கொழும்பு - 10 என்ற முகவரியில் இந் நிதியம் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி நிதியம் தெரிவித்துள்ளது.
விரிவான மற்றும் வினைத்திறனான மக்கள் சேவைகளை வழங்குவதற்காகவும், சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக இங்கு வருகை தரும் மக்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்காகக் கொண்டுமே, ஜனாதிபதி நிதியத்தை புதிய இடத்தில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இந்நிதியத்தின் ஊடாக சேவைகளைப் பெற்றுக்கொள்ள வருகை தரும் மக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்கள் தொடர்பிலும் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்வதாக ஜனாதிபதி நிதியம் குறிப்பிட்டுள்ளது.
21 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வழமைபோல் ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், நிதியத்துடன் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கங்களில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்றும் நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைய, 011-2331245, 011-2431610, 011-2382316 ஆகிய தொலைபேசி இலக்கங்களினூடாக ஜனாதிபதி நிதியத்துடன் தொடர்புகொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments