( ஐ. ஏ. காதிர் கான் )
"டுக் டுக்" என்ற தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், சுற்றுலாப் பயணிகளுக்குப் பொருத்தமான முச்சக்கர வண்டிச் சேவைகளில் ஈடுபட்டுள்ள கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த சாரதிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கை ஹொட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில், இது தொடர்பிலான வைபவம் ஒன்று இடம்பெற்றது,
முதற் கட்டத்தின் கீழ், 270 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
முச்சக்கர வண்டிகளில் பயணிப்பதற்கு, சுற்றலாப் பயணிகள் பெரும் ஆர்வம் கொண்டிருப்பதாக, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
0 Comments