Ticker

6/recent/ticker-posts

மாவனல்லையில் சிறிய வர்த்தக நிலையங்களில் தீ

மாவனல்லைப் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

மாவனல்லை நகரத்தில் அமைந்துள்ள தற்காலிக வர்த்தக கட்டிடங்களில் இன்று அதிகாலை 4.00 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மாவனல்லை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு சொந்தமான கடைகளே தீயில் பாதிப்படைந்தள்ளன.

தீயினால் உயிர் சேதம் ஏற்படாத போதிலும் பாரிய பொருட் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், சேதவிபரம் இதுவரை மதிப்பிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாவனல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment

0 Comments