ஜனாதிபதியின் உரைக்கு சபாநாயகர் பதிலடி கொடுத்தமை மற்றும் தேசிய அரசமைக்கும் யோசனை ஆகியவற்றால் ஆளும் - எதிரணி உறுப்பினர்களுக்கிடையில் நாடாளுமன்றத்தில் இன்று கடும் சொற்போர் மூண்டது.
இதனால், சபை நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
நாடாளுமன்றம் இன்று ( 07) முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.
சபாநாயகர் அறிவிப்பு வேளையின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் நேற்று (06) ஆற்றிய உரையின்போது, சபாநாயகர் தொடர்பிலும், அரசமைப்பு பேரவை குறித்தும், மனித உரிமை ஆணைக்குழு சம்பந்தமாகவும் வெளியிட்ட கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் சபாநாயகர் கருத்துகளை முன்வைத்தார்.
சபாநாயகரின் உரை முடிந்ததும் அதற்கு மஹிந்த அணி கடும் எதிர்ப்பை வெளியிட்டது. சபாநாயகரின் கருத்தை ஏற்கமுடியாது என்றும் வாதிட்டது. அத்துடன், சபாநாயகர் எதேச்சதிகாரமாகச் செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டியது.
இதற்கு சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல பதிலடி கொடுத்தார். மேலும் சில ஆளுங்கட்சி உறுப்பினர்களும் கருத்துகளை முன்வைத்தனர்.
இதற்கிடையில் மஹிந்த அணி எழுந்து நின்று உடனடி விவாதமொன்றைக் கோரியது.
இதனால், கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்தி முடிவொன்றை எடுப்பதற்காக முற்பகல் 11 மணியளவில் சபை நடவடிக்கைகளை தற்காலிகமாக ஒத்திவைத்தார் சபாநாயகர் கரு ஜயசூரிய.

0 Comments