Ticker

6/recent/ticker-posts

அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் இலங்கைக்காக சவுதி அரேபியத் தூதுவரை சந்தித்தார்.

இந்த வருட நோன்பு காலத்துக்கான சவுதி அரசால் வழங்கப்படும் பேரீச்சம் பழம், கடந்த வருடத்தை விட இம்முறை கூடுதலாக வழங்கப்படும் என்று முஸ்லிம சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார். இலங்கையிலுள்ள அரபுக் கல்லூரிகளில் கற்று வெளியேறும் உலமாக்களுக்கு மேலதிக பயிற்சி நிலையமொன்றை இலங்கையில் அமைப்பது தொடர்பாக, இலங்கைக்காக சவுதி அரேபியத் தூதரகத்தில் தூதுவர் அப்துல் நாஸிர் பின் ஹுஸைன் அல் ஹாரிஸ்தியுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் அமைச்சர் இதனை தெரிவித்தள்ளார்.

கடந்த வருடம் 150 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழமே இலங்கைக்குக் கிடைத்தது. இவ்வருடம் 250 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழம் வழங்கப்பட வேண்டும் என அமைச்சரால் தூதுவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments