Ticker

6/recent/ticker-posts

மாகந்துர மதூஷ் இலங்கைக்கு..?

துபாயில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல பாதாள உலக கும்பல் தலைவன் மாகந்துர மதூஷ் உள்ளிட்ட குழுவினரை நாட்டுக்கு கொண்டு வருவதற்காக இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸ் விஷடே அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம். ஆர்.லத்தீப் தெரிவித்துள்ளார். 

இருநாட்டு அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் இந்நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கை வௌிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு தலையிட்டு இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் என்று சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம். ஆர். லத்தீப் மேலும் தெரிவித்துள்ளார். 

பிரபல பாதாள உலக கும்பல் தலைவன் மாகந்துர மதூஷ் உள்ளிட்ட குழுவினர் துபாய் மற்றும் இலங்கை பொலிஸார் ஒன்றிணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments