Ticker

6/recent/ticker-posts

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியரான பௌத்த பிக்குவுக்கு 11 ஆண்டுகள் சிறை!

16 வயதிற்கு உட்பட்ட ஒரு பள்ளி வயது சிறுமி ஒருவர் மீது பாலியல்  துஷ்பிரயோகம் இழைத்த பௌத்த பிக்கு ஒருவருக்கு 
சபரகமுவ  மாகாண கேகாலை உயர்நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தள்ளது.

நீதிபதி நாமல் பண்டாரா பாலாலே இந்த தண்டனையை விதித்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஒரு லட்சம் ரூபாய்  இழப்பீடு வழங்கவும்  உத்தரவிட்டார்.

குற்றவாளியாக இனம் காணப்பட்ட பிக்கு 2010 ம் ஆண்டு  தனது விகாரையில் இடம்பெற்ற வகுப்புக்கு கற்க வந்த 14 வயதுடைய சிறுமியின் மீது பாலியல் துஷ்பிரயோகத்தை இழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

Post a Comment

0 Comments