நில ஆக்கிரமிப்பை நிறுத்துதல், சர்வதேச போர்க்குற்ற விசாரணையை துரிதப்படுத்துதல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பொறுப்புக் கூறுதல், இராணுவ வெளியேற்றம் மற்றும் மீளக்குடியமர்வை பூரணப் படுத்துதல் ஆகிய ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், சர்வதேச தலையீட்டை கோரியும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் “எழுக தமிழ்” நிகழ்வு நடைபெற உள்ளது.
யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுக் கூட்டத்தில் அதன் துணைத் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன் இத்தகைய ஒரு எழுக தமிழ் நிகழ்வை நடத்துவது அவசியம் என்று வலியுறுத்தி இருந்தார்.
விக்னேஸ்வரனின் இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பேரவையின் மத்திய குழு உறுப்பினர்கள் முதலாவது எழுக தமிழ் நிகழ்வை யாழ்ப்பாணத்திலும் தொடர்ந்து வன்னி மற்றும் கிழக்கு மாகாணத்திலும் நடத்துவது என்று முடிவு செய்தனர்.
வடக்கு கிழக்கில் உள்ள பொது அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இந்த எழுக தமிழ் நிகழ்வுகளை நடத்துவது என்றும் இதற்காக ஒரு பொது ஏற்பாட்டு குழுவை அமைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த கட்ட ஏற்பாடுகளை செய்யும் பொருட்டு தமிழ் மக்கள் பேரவையில் மத்திய குழு மீண்டும் விரைவில் கூடுவதற்கும் மேற்படி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

0 Comments