(க.கிஷாந்தன்)
இலங்கை பாராளுமன்றத்தில் உணவு மற்றும் தேனீர் போன்ற செலவுகளுக்கு
செய்வதில்லை என்பதை சபாநாயகர் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.பீ. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கினிகத்தேனை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை
தெரிவித்தார்.
இதன் போது மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
பாராளுமன்றத்தில் அங்கம் வைக்கின்ற 225 உறுப்பினர்களும், இந்த முறைபாட்டினை
தெரிவிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் உத்தியோகத்தர்கள் உள்ளார்கள்.
அதேபோல் பொலிஸார் இருக்கின்றனர். பாராளுமன்ற அமர்வு இடம்பெருகின்ற போது
ஊடகவியலாளர்கள் வருவார்கள். எனவே இவர்கள் அனைவரையும் கணக்கெடுப்பு
செய்தால் 1500க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு மற்றும் தேனீர் என்பன வழங்கப்பட
வேண்டிய தேவை இருக்கிறது.
இவர்களுக்கு காலை மதியம் இரவு நேரத்திற்கான உணவும் தேனீரும் வழங்கபடுகிறது.
இதற்கான அனைத்து செலவுகளையும் பாராளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு
மாத்திரம் அல்ல செலவு செய்யப்படுகிறது,
ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் சேர்த்தே செலவு செய்யபடுவதாக அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் 1500 உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள்.
எனவே இதற்கான செலவினை பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது
சுமத்துவது பிழையான விடயம், சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில்
இவ்வாறு தான் செலவு செய்யபடுகிறது என்ற விடயத்தினை இந்த நாட்டுக்கு
தெளிவுபடுத்த வேண்டும்.
பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மாதத்தில்
பத்து நாட்கள் மாத்திரமே இருப்பார்கள். இவ்வாறு வீண்விரயம் செய்யபடுவதாக
கூறினால் நாங்கள் சுகபோக வாழ்க்கை வாழ்வதாக மக்கள் நினைப்பார்கள்
எனவும் அவர் குறிப்பிட்டார்.

0 Comments