Ticker

6/recent/ticker-posts

சவுதி அரேபியாவில் கொரோனா வைரஸ் தொற்று மொத்தம் 1,012 பேர் மூன்று பேர் மரணம்!

சவுதி அரேபியாவில் புதிதாக 112 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர்.   இதன் மூலம்  சவுதியில் தொற்றுக்கள்ளானவர்களின் மொத்த  எண்ணிக்கை 1,012 ஆக உயர்ந்துள்ளதாக  சவுதி சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிதாக வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் 112 பேர்களில் 34 பேர் ரியாத்தில், 26 பேர் மக்காவில், 13 பேர் ஜித்தாவில், மற்றும் 18 பேர் தாயிபிலும்  பதிவாகியுள்ளனா்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றால்  மொத்தம் மூன்று பேர் இறந்துள்ளதாகவும் 33 பேர் வைரஸ் தொற்றிலிருந்து சிகிச்சையின் பின்னர் மீண்டுள்ளனர் என்றும் சவுதி சுகாதார அமைச்சு அறிவித்துள்ளதாக அல் அரேபியா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments