Ticker

6/recent/ticker-posts

வுஹானில் “கொரோனா” எதிர் நடவடிக்கைகளை அவசரமாக தளர்த்த வேண்டாம்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை

வுஹானில் கொரோனா தொடர்பான எதிர் கட்டுப்பாடுகளை, நடவடிக்கைகளை அவசரமாக  தளர்த்துவது  நோய்த்தொற்றுகளின் இரண்டாவது பரவலுக்கு  மீண்டும் தூண்டக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

லான்செட் (Lancet) மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, மார்ச் மாதத்தில் வுகானில் கட்டுப்பாடுகளை நீக்குவது  ஆகஸ்ட் மாதத்தில் பிரச்சினையை மீண்டும்  உச்சகட்டத்திற்கு கொண்டு செல்ல  வழிவகுக்கும் என்று கூறுகிறது.

ஏப்ரல் வரை கட்டுப்பாடுகளை பராமரிப்பதன் மூலம்  அக்டோபர் வரை இரண்டாவது உச்சத்தை தாமதப்படுத்தலாம் என்றும் லான்செட் மருத்துவ இதழ் கணித்துள்ளதாக த கார்டியன் இணையதளம் செய்தி வெளியிட்டள்ளது.

Post a Comment

0 Comments