கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணித்த நீர்கொழும்பு போரதொட்ட பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய முஹம்மத் ஜமால் என்பவரின் ஜனாஸா இன்று நள்ளிரவு 12.30 மணியளவில் எரியூட்டப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு பொதுமயானத்தில், நீர்கொழும்பு பொது மருத்துவமனை, அதிகாரிகள், கொச்சிக்கடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் அப்பகுதியின் பொது சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
நீர்கொழும்பு பலகத்துறை மையவாடியிலும், கொழும்பு மாளிகாவத்தை மையவாடியிலும் கப்றுகள்(புதைகுழிகள்) தோண்டப்பட்டிருந்த நிலையில் மருத்துவ அதிகாரிகளின் ஆலோசனைக்கு ஏற்ப இவரின் ஜனாஸா இரவோடிரவாக நீர்கொழும்பு மாநகர சபையின் பொதுமயானத்தில் எரியூட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.






0 Comments