Ticker

6/recent/ticker-posts

கொரோனா எதிரொலி : ஜெர்மனியின் ஹெஸ்ஸி பிராந்திய நிதியமைச்சர் தற்கொலை!

ஜெர்மனியின் ஹெஸ்ஸி பிராந்திய நிதியமைச்சர், கொரோனாவால் நாடு சீரழிவதை பொறுக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹெஸ்ஸி பிராந்திய நிதியமைச்சரான 54 வயது தோமஸ் ஷோர் Thomas Schaefer என்பவரே கொரோனா தொற்றால் நாட்டில் ஏற்பட்டுள்ள அபாயகரமான நிலையினால் பெரும் மன அழுத்தத்தில், ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஜெர்மனிய அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் Christian Democratic Union கட்சியின் உறுப்பினரான தாமஸின் உடல் பிராங்பேர்ட்டுக்கு அருகிலுள்ள Hochheim பகுதி ரயில் தண்டவாளத்தில் இருந்து சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் நிதியமைச்சர் தாமஸ் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என முதற்கட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நாட்டின் பொருளாதாரம் கொரோனாவால் சீரழிவதாக அமைச்சர் தாமஸ் கவலையிலும் மன உளைச்சலிலும் இருந்துள்ளதாக அறிய வருகிறது.

Post a Comment

0 Comments