Ticker

6/recent/ticker-posts

கொரோனா தொற்று எச்சரிக்கை! சட்டங்களை அனுசரிக்காத புசல்லாவ மக்கள்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நடைமுறையில் இருந்த ஊரடங்கு சட்டம்  இன்று (26) தளர்த்தபட்ட பொழுது மலையகத்தில்  காணப்படும் பெரும்பாலான நகரங்களில் மக்கள் பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டனர். அதன் ஒரு கட்டமாக இன்று (26) புஸ்ஸல்லாவ நகரில் மக்கள் பொருட்கள் கொள்வனவுகளிலும் வங்கி நடவடிக்கைகளிலும் எரிபொருள் நிரப்புதல் உட்பட அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்

இருந்தும் கொரோனா வைரஸ் பரப்புதல் நடவடிக்கைகள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் பின்பற்றபட்டு வரும் ஒரு மீற்றருக்கு அப்பால் நிற்;க வேண்டும் என்ற கட்டாய  செயற்பாடு இங்கு நடைமுறைபடுத்தவில்லை கடைகளில்  மக்கள் கூட்டம் கூட்டமாகவே பொருட்களை கொள்வனவு செய்தனர். 

இன்று பொருட்களை கொள்வனவு செய்வதற்காக  மக்கள் முண்டி அடித்துக் கொள்வதை காணக் கூடியதாக இருந்தது. கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுபடுத்த ஊரடங்கு சட்டம் நடைமுறைபடுத்தி பின் பொருட்கள் கொள்வனவுக்காவும் அத்தியாவசிய தேவைக்காகவும் ஊரடங்கு சட்டம் தளர்த்தும் சந்தர்பங்களில் மக்கள்  உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல  நடந்து கொண்டது பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையை எழுப்பி இருக்கிறது. 

 மக்களின் இத்தகைய செயற்பாடுகளால் வைரஸ்  பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. இந்நிலை தொடராமல் இருக்க  அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Post a Comment

0 Comments