Ticker

6/recent/ticker-posts

கணவன்மார்களால் தாக்குதலுக்குள்ளான பெண்கள் 25 பேர் மருத்துவமனையில்...!

ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும்  கடந்த ஐந்து நாட்களில் இருபத்தைந்து பெண்கள் தமது கணவன்மார்களினால் தாக்கப்பட்டு, காயமுற்று  கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதின்  மூலம் போதைப்பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதால் அதற்கு அடிமையானவர்கள் பலர்  திண்டாடி வருவதாக அறிய வருகிறது.

போதைப்பொருளுக்கு அடிமையான  கணவன்மார் போதைப்பொருள் கிடைக்காத காரணத்தால்  தங்களை கடுமையாக தாக்கியதாக  இவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments