Ticker

6/recent/ticker-posts

ஊரடங்கு உத்தரவின் போது மருந்துகளைப் பெறுவதற்கான ஒரு வேலைத்திட்டத்தை உருவாக்குவதில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்!

ஊரடங்கு உத்தரவின் போது சிரமமின்றி அத்தியாவசிய மருந்துகளைப் பெறுவதற்கான ஒரு வேலைத்திட்டத்தை  உருவாக்குவதில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.

நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் தொற்றா  நோய்களுக்கு சிகிச்சை பெறும்  நோயாளிகள் ஊரடங்கு உத்தரவு காரணமாக மருந்துகள் வாங்குவதில் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.

இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, ஒவ்வொரு நகரத்திலும் ஒரு மருந்தகம் ஊரடங்கு வேளையிலும் திறந்திருக்க  வேண்டும் என்று முடிவாகியுள்ளதோடு , அதற்கான பொது தொலைபேசி இலக்கங்கள் வெளியிடப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

நோயாளிகள்  வாட்ஸ்அப் விண்ணப்பத்தின் மூலம் குறித்த  தொலைபேசி எண்ணுக்கு தமக்கு தேவையான மருந்து தொடர்பான தகவல்களை அனுப்ப வேண்டும் என்றும், மருந்தகங்கள் மூலம்  மருந்தை வீட்டிற்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் என்றும் அறிய வருகிறது.

Post a Comment

0 Comments