Ticker

6/recent/ticker-posts

ஹட்டனில் கைகளை சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை

(க.கிஷாந்தன்)

‘கொரோனா’ வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் ஹட்டன் பகுதியிலுள்ள வர்த்தக இளைஞர்கள் சிலர், ஹட்டன் பேருந்து தரிப்பிடத்தில் கைகளை சுத்தமாக கழுவுவதற்குரிய ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளனர்.

‘கொரோனா’ வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு சுகாதார பிரிவினரால் மக்களுக்கு பல சுகாதார ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி கைகளை உரிய வகையில் கழுவி சுத்தமாக இருப்பதன் மூலம் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம் என்றும், வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே கிருமி ஒழிப்பு நடவடிக்கையின் ஓரங்கமாக அட்டன் நகர இளைஞர்கள், தமது சொந்த நிதியில் தண்ணீர் தாங்கியையும், கைகளை கழுவுவதற்கான உபகரணத்தையும், தேவையான பொருட்களையும் பேருந்து நிலையத்தில் வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இலங்கையில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக நீங்கிவிட்டது என சுகாதார அமைச்சால் அறிவிப்பு விடுக்கப்படும் வரையில் ஆரம்பமான இத்திட்டம் நடைமுறையில் இருக்கும் என இளைஞர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments