முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான சமகி ஜனபலவேகய (ஐக்கிய மக்கள் சக்தியில்) போட்டியிட உள்ளதால், ஐக்கிய தேசிய கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து தான் விலகுவதாக முன்னாள் பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா எம்.பி தெரிவித்தார்.
ஐ.தே.க தலைமையகமான சிறிகொத்தவில் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று (18) நேரில் சந்தித்து தனது தீர்மானத்தை அறிவித்ததாகவும் தெரிவித்தார்.
அத்தோடு தான் பதவி விலகுவதை அவர் விரும்பவில்லை என்றும், தன்னை பதவி விலக வேண்டாமென கோரிக்கை விடுத்தாகவும் தெரிவித்த அவர், அவருடன் தனக்கு தனிப்பட்ட முரண்பாடுகள் எவையும் கிடையாதெனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

0 Comments