கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் மூடப்பட்டுள்ளது. உலகின் மிக முக்கிய சுற்றுலா இடமும் உலக அதிசயங்களில் ஒன்றான இடமான தாஜ்மகால் வரும் 31ம் தேதி வரை மூடப்படுவதாக இந்திய மத்திய சுற்றுலா அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸின் தாக்குதலுக்கு இந்தியாவில் 114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கொரோனா அறிகுறியுடன் 125 பேர் கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், நாசகார கிருமியின் வேகத்தை கட்டுப்படுத்த பாடசாலை, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
திரையரங்குகள் மற்றும் அருங்காட்சியங்களையும் மூடும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றானதும், உலக அதிசயங்களில் முக்கியமானதுமான தாஜ்மகால் வரும் 31ம் தேதி வரை மூடப்படுவதாக இந்திய மத்திய சுற்றுலா அமைச்சகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து, அங்கு பார்வையாளர்கள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தாஜ்மகாலை சுற்றிப்பார்க்க வந்த வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டதையடுத்து இந்நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

0 Comments