வெலிசறை கடற்படை முகாமில் உள்ள கடற்படை வீரர்கள்
29 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு சுதுவெல்ல பகுதியில் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையான கொரோனா தொற்றுக்குள்ளான நபரை தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படை வீரர் ஒருவர் மூலம் வெலிசரை கடற்படை முகாமில் உள்ள ஏனைய வீரர்களுக்கு பரவியிருப்பதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்தள்ளார்.
நேற்றைய தினம் இந்த நோயால் பாதிக்கப்பட்டோர் அதிக எண்ணிக்கையில் அடையாளம் காணப்பட்ட நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டோர் தொகை 39 ஆகும்.
இதன்படி கொரோனா வைரஸ் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 368 ஆக அதிகரித்துள்ளது

0 Comments