எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் வேதனையானது என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அடுத்து வரும் வாரங்களில் அமெரிக்காவில் இடம்பெறவிருக்கும் உயிரிழப்புகள் தொடர்பாகவே அவர் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸுடன் போராடும் அமெரிக்க உயர்மட்ட விஞ்ஞானிகள் கொரோனா கொடிய நோய்க்கிருமி 100,000 முதல் 240,000 அமெரிக்கர்களைக் கொல்லக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளதை ஆதாரமாக வைத்து ட்ரம்ப் இந்த எச்சரிக்கையை விட்டுள்ளார்.
கொரோனா வைரஸுக்கு எதிராக போராடும் அமெரிக்காவின் உயர்மட்ட விஞ்ஞானிகள் இந்த கொடிய வைரஸ் 100,000 முதல் 240,000 அமெரிக்கர்களைக் கொல்லக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளனர்.
சமூக இடைவெளியை கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகள், பாடசாலைகளை மூடுதல், பெரிய கூட்டங்களை தடைசெய்தல் , மற்றும் மக்களை தங்கள் வீடுகளில் தங்கும்படி கட்டாயப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கிறது அமெரிக்க அரசு.
அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணர் டொக்டர் அந்தோணி எஸ். ஃபோசி Dr. Anthony S. Fauci மற்றும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு திட்டத்தை ஒருங்கிணைக்கும் டாக்டர் டெபோரா எல். பிர்க்ஸ் Dr. Deborah L. Birx ஆகியோர் செவ்வாயன்று வெள்ளை மாளிகையில் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளதாக த நிவ் யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

0 Comments