கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றானது உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் உலகெங்கிலும் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவுகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பல புதிய விஷயங்களுக்கு அவை வித்திட்டுள்ளன. குறிப்பாக மக்கள் தங்கள் பாதுகாப்பு விஷயங்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதில் தாய்லாந்தில் உள்ள ஒரு மருத்துவமனை அடுத்த கட்டத்திற்கே சென்றுவிட்டது என்று சொல்லலாம்.
தாய்லாந்தில் உள்ள சமுத் பிராகர்ன் மாகாணத்தில் அமைந்திருக்கும் பவோலோ மருத்துவமனையில் (Paolo Hospital), பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கென்று பிரத்யேக மாஸ்க்களை தயாரித்துள்ளனர். இதன் மூலம் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க முடியுமென்று மருத்துவமனை வட்டாரம் கூறுகின்றது.
இது குறித்து பவோலோ மருத்துவமனை, தனது முகநூல் பக்கத்தில், “எங்கள் மருத்துவமனையில் பிறந்த பிஞ்சுகளுக்கு கூடுதல் பாதுகாப்பு. முகத்தை மறைக்கும் மாஸ்க். சோ கியூட்!” என்று சில புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளது. ndtv.com

0 Comments