முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரனில் விக்ரமசிங்க, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்க உதவியை நிறுத்தி வைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ரனில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி உலக சுகாதார அமைப்புக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் எனவும், அந்த விசாரணை முடியும் வரை உலக சுகாதார அமைப்புக்கு நிதி வழங்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 Comments