வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவின் நீண்டகால எனிமேட்டராகபணியாற்றிய ஏன் சல்லிவன் Ann Sullivan கொரோனா வைரஸ் தொற்றால் இறந்துள்ளார்.
அவர் வுட்லேண்ட் ஹில்ஸில் உள்ள மருத்துவமனையில் இறந்ததாக மோஷன் பிக்சர் மற்றும் தொலைக்காட்சி நிதியம் திங்களன்று அறிவித்தது. ஏன் சல்லிவனுக்கு வயது 91.
ஏன் சல்லிவன் கொரோனா வைரஸின் பாதிப்பால் இறந்த மோஷன் பிக்சர் மற்றும் தொலைக்காட்சி நிதி நிறுவனத்தின் மூன்றாவது உறுப்பினர் ஆவார்.
தி லிட்டில் மெர்மெய்ட் The Little Mermaid மற்றும் தி லயன் கிங் The Lion King உள்ளிட்ட பிரபலமான டிஸ்னி படங்களில் தனது கைவரிசையை காட்டியுள்ள ஏன் சல்லிவன் நீண்டகாலமாக வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவி அனிமேட்டரான கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments