Ticker

6/recent/ticker-posts

கொரோனா மூன்று இலட்சம் ஆபிரிக்கர்களைக் கொல்லக்கூடும்!


கொரோனா (கோவிட் -19) தொற்றுநோய் குறைந்தது  மூன்று இலட்சம் 300,000 ஆபிரிக்கர்களைக் கொல்லக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபையின் ஆப்பிரிக்க பொருளாதார ஆணையம் (UNECA) எதிர்வு கூறியுள்ளது.

மேலும் 29 மில்லியன் ஆபிரிக்க மக்களை  தீவிர வறுமையில் தள்ளும் அபாயங்கள் இருப்பதாகவும்  ஐ.நா. ஆப்பிரிக்கா பொருளாதார ஆணையம்  (UNECA)  வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. 

ஆப்பிரிக்காவின் 54 நாடுகளில் இதுவரை 20,000 க்கும் அதிகமான நோயாளிகள் பதிவாகியுள்ளனா். ஆனால் மூன்று முதல் ஆறு மாதங்களில் ஆப்பிரிக்காவில் 10 மில்லியன் நோயாளிகள் பதிவாகலாம் என்று உலக சுகாதார அமைப்பு வியாழக்கிழமை எச்சரித்தது.



Post a Comment

0 Comments