Ticker

6/recent/ticker-posts

கொரோனாவால் கடுப்பேறியிருக்கும் அமெரிக்கா!



சீனாவில் கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்கு சீன அரசு வூஹான் நகரை முற்றிலும் தனிமைப்படுத்தியது.
இந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கை இந்த கொடிய நோயைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக அமைந்தது.

சீனாவின் இந்த நடவடிக்கையை இன்று ஏனைய நாடுகளும் பின்பற்றி வருகின்றன.

அமெரிக்கா கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஒழுங்கான காத்திரமான எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு ட்ரம்ப் நிர்வாகத்தின் மீது வைக்கப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகளாலும் நாளுக்கு நாள் ஏற்படும் கொரோனா மரணங்களாலும்  ட்ரம்ப் அரசு மிகவும் கடுப்பேறி இருக்கிறது.

அமெரிக்காவின் வொய்ஸ் ஒப் அமெரிக்கா ஒலிபரப்பு நிலையம் கொரோனாவை கட்டுப்படுத்திய சீனாவின்  இந்த நகரங்களை தனிமைப்படுத்தும் முறையை வெகுவாக புகழ்ந்து பேசியிருக்கிறது.

வைரஸைக் கட்டுப்படுத்த சீனா மேற்கொண்ட தனிமைப்படுத்தல் முறையை  ஒரு வெற்றகரமான சிறந்த மாதிரி வடிவம் என்று வொய்ஸ் ஒப் அமெரிக்கா ஊடகம் புகழ்ந்துரைத்துள்ளது.

வொய்ஸ் ஒப் அமெரிக்காவின் இந்த செய்தியால் அமெரிக்க வெள்ளை மாளிகை கடுமையாக கடுப்புற்று இருப்பதை ரொய்ட்டர்  நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

சீனாவின் உத்தியோகபூர்வ கொரோனா வைரஸ் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி "பெய்ஜிங்கின் பிரச்சாரத்தை"  செய்து வருவதாக வெள்ளை மாளிகை வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா (VOA) மீது குற்றம் சாட்டியுள்ளது.

"வொய்ஸ் ஒப் அமெரிக்கா (VOA) கூட பெரும்பாலும் அமெரிக்காவின் எதிரிகளுக்காக பேசுகிறது - அதன் குடிமக்களுக்காக அல்ல," என்று வெள்ளை மாளிகை வியாழக்கிழமை  கூறியுள்ளது.

அமெரிக்க காங்கிரஸின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இயங்கும் இந்த ஊடக நிறுவனம்  வரி செலுத்துவோரின் பணத்தில்  "எதிரிகளின் பிரச்சாரத்தை ஊக்குவிக்கிறது" என்றும் வெள்ளை மாளிகை குற்றம் சாட்டியுள்ளது.
(Azeez Nizardeen)

Post a Comment

0 Comments