Ticker

6/recent/ticker-posts

தோல்வியில் முடிந்த முஸ்லிம் அரசியல் தலைமைகளின் முயற்சி!





கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களை எரியூட்டாமல் நல்லடக்கம் செய்வது தொடர்பாக முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கையும், எதிர்பார்ப்பும் இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடனான கூட்டத்தின் போது சிதறடிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிஷாத் பதியுதீன் உட்பட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொரோனா தொற்றால் நாடு எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அனைத்து கட்சி தலைவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று அலரி மாளிகையில் இடம்பெற ஏற்பாடாகியிருந்தது.
இதேவேளை முஸ்லிம் அரசியல் தலைமைகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி கலந்தாலோசிப்பதற்கு சந்தர்ப்பம் ஒன்றை கோரியிருந்தன.
கொரோனா நோயில் மரணித்த முஸ்லிம்களைின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பிரத்தியேகமாக நேரத்தை ஒதுக்கித்தருமாறு முஸ்லிம் தரப்பினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
இதற்கு தனியாக நேரம் ஒதுக்காமல் அனைத்து கட்சி அங்கத்தவர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்திலேயே தேவையான விடயங்களை பேச முடியும் என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பிரதமர் என்ற ரீதியில் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்தாலோசிக்க விரும்புவதாக முஸ்லிம் தரப்பினர் எடுத்துக் கூறியும், அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படாமல் அனைத்துக் கட்சி அங்கத்தவர்களின் கூட்டத்தில் பேச முடியும் என்று மஹிந்த தரப்பில் முஸ்லிம் தரப்பினருக்கு கூறப்பட்டுள்ளது.
எனவே அனைத்து கட்சி அங்கத்தவர்களின் கூட்டத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு மரணிக்கும் முஸ்லிம்களை நல்லடக்கம் செய்ய தடையாக இருக்கும் சுற்றுநிருபம் வாபஸ் பெறப்பட்டு, புதிய சுற்று நிருபத்தை வெளியிடுவதுடன், துறைசார் நிபுணர்கள் குழு ஒன்றை நியமித்து இதனை எதிர்கொள்ள ஆவன செய் வேண்டும் என ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.
இந்த யோசனைக்கு விமல்வீரவன்ச, உதய கம்மன்பில, பவித்திரா வன்னியாராட்சி, டொக்டர் அனில் ஜாசிங்க ஆகியோர் மறுப்பு தொிவித்துள்ளனர். நோயினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாது எரிக்கவே வேண்டுமென்று அவர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர்.
ஜனாசாக்களை எரிக்காமல் நல்லடக்கம் செய்வது தொடர்பில் மஹிந்த ஆதரவு நிலையில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் கொடுத்துள்ள அழுத்தங்கள் கூட எவ்வித பலனும் இல்லாமல் போயிருக்கின்றன.
முஸ்லிம்கள் எதிர்நோக்கும் குறித்த பிரச்சினை தொடர்பில் ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்கவோ, சமகி ஜனபல வேகய தலைவர் சஜித் பிரேமதாஸவோ எவ்வித கருத்துக்களையும் வெளியிடாமல் மௌனம் காத்து இருந்துள்ளது இங்கு குறிப்பிடக் கூடிய அம்சமாகும்.

Post a Comment

0 Comments