கோவிட் -19 வைரஸ் வுஹானில் உள்ள வனவிலங்கு சந்தையில் ஏற்பட்ட மாசுபாட்டால் ஏற்பட்டதாக நம்ப முடியாது என்றும், இது அவ்வாறு இருக்க வாய்ப்பில்லை என்றும், வுஹானில் உள்ள உயர் பாதுகாப்பு ஆய்வகத்தில் இருந்து இந்த வைரஸ் கசிந்துள்ளது என்றும் மருத்துவத்திற்காக நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு பேராசிரியர் லூக் மொண்டாக்னியர் ( Luc Montagnier ) உறுதி பட கூறுகிறார்,
வுஹானில் உள்ள இந்த உயர் பாதுகாப்பு ஆய்வகம் 2000 ம் ஆண்டுகளின் முற்பகுதியில் இருந்து கொரோனா வைரஸில் நிபுணத்துவம் பெற்றது என்று பேராசிரியர் லூக் மொண்டாக்னியர் மேலும் கூறியுள்ளார்.
எய்ட்ஸ் வைரஸைக் கண்டுபிடித்ததில் தனது பங்களிப்பை செய்ததற்காக 2008 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பேராசிரியர் லூக் மொண்டாக்னியருக்கு வழங்கப்பட்டது.
பேராசிரியர் லூக், தனது கணிதவியலாளர் சகாவான ஜீன்-கிளாட் பெரெஸுடன் ( Jean - Claude Perrez )சேர்ந்து, புதிய கொரோனா வைரஸின் மிகச்சிறிய துணை வகைகளை ஆராய்ந்தார், மேலும் கொரோனா வைரஸின் மரபணு வரிசை எச்.ஐ.வி வைரஸுடன் ஒத்திருப்பதையும் கண்டறிந்தார்.
வுகான் உயர் பாதுகாப்பு ஆய்வத்தில் எய்ட்ஸ் வைரஸுக்கு தடுப்பூசி தேடும் முயற்சியின் விளைவாகவே புதிய கொரோனா வைரஸ் உருவாகி அங்கிருந்து வெளியே கசிந்திருப்பதாக பேராசிரியர் லூக் கூறியுள்ளதோடு இது ஒரு “தொழிற்துறை விபத்து” என்றும் வர்ணித்திருக்கிறார்.

0 Comments