Ticker

6/recent/ticker-posts

“குடி” மக்களால் திறைசேரிக்கு கிடைக்கவேண்டிய 50 கோடி இழப்பு!


கொரோனா (கோவிட் -19) பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக  அமுல்படுத்தப்பட்ட  ஊரடங்கு உத்தரவினால்  அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டன.

இதையடுத்து இக்காலப்பகுதியில் திறைசேரிக்கு  வரியாக கிடைக்க வேண்டிய  ஐம்பது கோடி ரூபாய்கள் கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கலால் திணைக்கள பிரதி ஆணையாளர் கபிலா குமாரசிங்க, மதுபானம் தயாரித்தல் மற்றும் விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்ட கலால் வரியே இவ்வாறு இழக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

நாட்டில் மதுபானம் உற்பத்தி செய்யப்படாத போதிலும், கடந்த இரண்டு வாரங்களில் சட்டவிரோத மதுபானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

.

Post a Comment

0 Comments