சமூக ஊடகங்களில் பொய்யை பரப்பியதாக கைது செய்யப்பட்ட ஸ்வர்ணா மல்காந்தி என்ற பெண் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் அஜித் பி.பெரேரா மற்றும் குணரத்ன வன்னிநாயக்க உட்பட பல சட்டத்தரணிகள் இன்று இவர் சார்பாக நீதிமன்றில் ஆஜராகினர்.
இன்று சமூக ஊடகங்களில் உண்மையை வெளிப்படுத்தும் உரிமையையும் அவர்களின் சுதந்திரமான கருத்தை வெளிப்படுத்தும் உரிமையையும் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் அஜித் பி.பெரேரா கருத்து தெரிவித்துள்ளார்.

0 Comments