கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு தடுப்பு மருந்துகள் இல்லாத நிலையில், மலேரியா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் (Hydroxychloroquine) மருந்துகள் பலனளிப்பதாக மருத்து நிபுணர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்தியாவிடம் அமெரிக்கா அதிக அளவில் அந்த மருந்தை வாங்க கோரிக்கை விட்டுள்ளது.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஹைட்ராக்ஸிகுளோராகுயின் உள்பட, மேலும் சில மருத்துவ பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு தடை விதித்திருந்தது.
அமெரிக்காவின் ஹைட்ராக்ஸிகுளோராகுயின் மருந்துகளுக்கான விண்ணப்பத்தினை இந்தியா ஏற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசிய டிரம்ப், அமெரிக்காவினால் ஏற்கனவே கோரப்பட்ட ஹைட்ராகிஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விட்டிருந்தார்.
இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் , " நாங்கள் ஏற்கனவே கோரிய ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்பும் என்று நம்புகிறேன். அவ்வாறு செய்யவில்லை என்றால் தக்க பதிலடி கொடுப்போம்" என மறைமுகமாக மிரட்டும் வகையில் கருத்துக் கூறியிருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதேவேனை அமெரிக்கா உட்பட மேலும் பல நாடுகள் இந்த மருந்தினைப் பெறுவதற்கான உதவியைக் கோரியிருந்த நிலையில், இது தொடர்பாக அரசியற் தலைவர்கள், மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பிரதமர் கலந்தாலோசித்ததின் பின்னர், மனிதாபிதான ரீதியில், , இந்தியாவைச் சார்ந்துள்ள அண்டை நாடுகள் மற்றும், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்திய மத்திய அரசு இன்று அனுமதி அளித்துள்ளது.

0 Comments